விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம்
நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனஇதில்,
தொழிலாளர்
விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சகோரிக்கைகள்
முன் வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், வேலை
நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கி, காப்பீடு, பொதுத்துறையைச் சேர்ந்த
ஊழியர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள்,
மத்திய வர்த்தக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
தமிழகத்தில், ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...