தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு கடந்து வந்த பாதை
- 03.02.2014 அன்று தமிழக முதல்வர் சட்டபேரவையில் விதி எண் 110 ன் கீழ் ஆசிரியர் தகுதித்தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளித்தார்.
- 06.02.2014 அன்று தமிழக பள்ளிக் கல்விதுறை GO M/S No.25 என்ற அரசானை மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அறிவித்தது. இதன் மூலம் 82-89 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் வெற்றி பெற்றனர்.
- 5% மதிப்பெண் தளர்வு 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என அந்த அரசானையில் கூறப்பட்டது.
- மார்ச் மாதம் 5% மதிப்பெண் சலுகையில் வெற்றி பெற்றோர் உட்பட அனைவருக்கும் சான்றிதழ் சாரிபார்ப்பு நடைபெற்றது
- 06.08.2014 அன்று 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றறோர் உட்பட அனைவருக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் டி.ஆர்.பி இனையதளத்தில் வெளியிடப்பட்டது.
- 10.08.2014 -BT.Asst 27.08.2014-SGT அன்று 5% மதிப்பெண் சலுகை பெற்றோர் உட்பட வெயிட்டேஜ் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு பட்டியலை டி.ஆர்.பி வெளியிட்டது.
- 03.09.2014 அன்று 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள் உட்பட அனைவருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் Online மூலம் வழங்கப்பட்டது.
- 15.09.2014 அன்று 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.
- 16.09.2014 அன்று சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் அளித்த உத்தரவு படி 5% மதிப்பெண் தளர்வு அரசின் கொள்கை நீதிமன்றம் தலையிடாது என கூறப்பட்டது.
- 22.09.2014 அன்று Go 71 -வெயிட்டேஜ் க்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது. வழக்கு எண் WA 1031/14, இதன் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிநியமன தடை நீங்கியது .
- 24.09.2014 அன்று Go 71 மற்றும் Go 25 (வெயிட்டேஜ் மற்றும் 5% மதிப்பெண் தளர்வு) எதிராக பெற்ற அனைத்து தடைகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீங்கியதால் மதுரை உயர்நீதிமன்ற கிளையும் அனைத்து தடைகளையும் நீக்கி உத்தரவிட்டது.
- 25.09.2014 அன்று மதியம் உயர்நீதிமன்ற மதுரைகிளை அமர்வு தீர்ப்பு ஒன்று வழங்கியது. வழக்கு எண் W.P(MD)Nos.2677&4558/2014 அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு அரசானை GO M/S No.25 ரத்து செய்யப்படுகிறது என்றும் இதன் மூலம் ஆசிரியர் பணிக்கு சென்றவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வேண்டாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- 25.09.2014 அன்று தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு (5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றோர் உட்பட) அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டது.
- வெயிட்டேஜ் GO71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வு போன்றவற்றின் மூலம் ஆசிரியர் பணிக்கு சென்றவர்களின் பணி செல்லாது எனவும் அரசின் பணி நியமனத்தை ரத்து செய்ய கோரியும் வழக்கு எண் WA 1031/14 சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர் வெயிட்டேஜ் ரத்து செய்யவேண்டும் என்றும் லாவண்யா மற்றும் பலர் சேர்ந்து வழக்கு எண் SPL (Cvil) 29245/2014 உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர். இவை 9 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
5% மதிப்பெண் சலுகை தற்போது உள்ள நிலை
- இந்த வழக்கு கடைசியாக 21.07.2015 அன்று விசாரனைக்கு வந்தது அப்போது தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு படி 5% மதிப்பெண் தளர்வை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கும்படி கேட்டதை தொடர்ந்து மாண்புமிகு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து லாவன்யா வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
- தமிழக அரசு 5% மதிப்பெண் சலுகை ரத்து செய்யபட்டதை எதிர்த்து மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்து செய்துள்ளது.
- வெயிட்டேஜ் மற்றும் 5% மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்குகள் அனைத்தும் வருகிற 01.09.2015 அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.
- தமிழக அரசு சென்னை உயர்நிதிமன்றம் மன்றம் மற்றும் மதுரை கிளை அமர்வு 5% மதிப்பெண் சலுகைக்கு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பே இறுதியானது என தமிழக அரசின் முதலமைச்சர் தனிப்பிரிவில் பதில் அளித்துள்ளனர் அரசின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு ஏற்ப இச் சலுகைகளை இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வழங்க அனுமதி அளிக்கும் படி கேட்டுக் கொண்டிருப்பார்கள் என தெரியவருகிறது.
- 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றோர்களில் சிலர் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளனர். ஆனால் பலருக்கு ஆசிரியர் வேலை தான் கிடைக்கவில்லை ஆனால் 5% மதிப்பெண் சலுகையில் வெற்றி பெற்றதும் செல்லாது என்பதால் அவர்களை தனியார் பள்ளிகளில் கூட பணிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.
- இவர்கள் நிலை இப்படி என்றால் 90 க்கும் மேல் பெற்றும் பணிக்கு செல்ல முடியவில்லை என்று மிகப் பெரிய வருத்தத்துடன் பலர் உள்ளனர்.
- வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்டாலே 82-89 மதிப்பெண் வரை பெற்றவர்கள் 90 ம்திப்பெண்க்கு கீழ் சென்று விடுவார்கள் 5% மதிப்பெண் சலுகை மூலம் வெற்றி பெற்றவர்களால் எந்த பாதிப்பும் 90 க்கும் மேல் பெற்றவர்களுக்கு கிடையாது என்பது நிதர்சமான உண்மை.
1 ம் தேதி கண்டிப்பாக வருமா சார்
ReplyDeletei too have the same question
Deleteநன்றி திரு. கார்த்திக் & பாடசாலை.
ReplyDeleteMarks relaxation can be given to Hill Tribes and Tribal Students to some extent. Since they are living in Hills and forests, they are having limited Educational Institutions, Higher Institutions, and inadequate opportunity for learning exposure and further development platform. Teachers are not willing to go hill places and forest areas for taking up teaching assignments. Further, such students are not having outer worldly exposure and unaware of scientific developments.
ReplyDeleteHence it is suggested that those Hill Tribes and Forest Tribal Students can be given 5% relaxation in scoring the reduced-alloted marks. But the Students belong to SC Category should not be given any relaxation in TET examinations, since all categories of SC community are living in plains and enjoying all Govt. perks.
epdi 90 above vangunavanga affect agaama iruppanga
ReplyDeleteepdi 90 above vangunavanga affect agaama iruppanga
ReplyDeleteAfter the govt announced 5% relaxation Why these persons who got above 90% didn't open their mouth immediately or put any case.
Deleteநன்றி பாடசாலை
ReplyDeleteWhy these people ( who put cases now for donot give relaxation) didnot oppose or open their mouth once the govt announced 5% relaxation and unnce shouting now unnecessarily. I think bcoz of this people every one getting problem. When govt announced the relaxation what these people were doing????
ReplyDelete5% relaxation job ponavangalukku problam varuma
ReplyDeleteIt's depends on case results also final judgement
DeleteNo problem all ready appointment teacher.
DeleteHai friends
ReplyDeleteI am bio chemistry with b ,ed.. I rejected to tet exam what should I do my optional is English is it I do one more degree.......
ReplyDelete