Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்

மதிப்பிற்குறிய நண்பர்களே,


        அரசு பணிக்கு மட்டுமே செல்ல துடிக்கும் நண்பர்களே அரசு பணிக்கு செல்வதற்கு தகுந்த திட்டமிடல் இருந்தாலே போதுமானது வெற்றி என்பது உறுதி. TNPSC  கடந்த 3 ஆண்டுகளில் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது அதற்கேற்ற முறையில் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

குரூப் 4 வெற்றி பெற வேண்டுமா

  •   சமச்சீர் கல்வி பாடத்திட்டம் கொண்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்களை படித்தாலே வெற்றி பெற முடியும்.
  •   கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை சேகரித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • எந்த எந்த பாடத்தில் எவ்வளவு கேள்விகள் கேட்கப்படுகிறது. எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ஆராய வேண்டும். 
 மேற்காணும் இந்த மதிப்பீடு 3 ஆண்டுகளில் நடந்த அனைத்து TNPSC  Group 2 ,2A ,Group 4 , VAO ஆகிய தேர்வுகளை  வைத்து நன்கு ஆரய்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஆகும்,
  • தமிழுக்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் 100 மதிப்பெண் 6 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.
  • கணிதம் மற்றும் காரணமறிதல் 25  கேள்விகள் உறுதி அடுத்த முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்
  • வரலாறு பாடத்திற்கு 3 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • குடிமையியல் பாடத்திற்கு 4 வது முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • உயிரியல் மற்றும் புவியியல் பாடத்திற்கு 5 வது சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • இயற்பியல் மற்றும் வேதியல் பாடம் தலா 4 கேள்விகள் வரலாம் எனவே இதில் அதிகமாக மூழ்கிபோகாமல் மேற்கானும் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் நலன்
  • பொருளாதாரம் பிரிவை பொருத்தவரை 4 முதல் 8 கேள்விகள் வரும் 11 மற்றும் 12 ம் வகுப்பு பொருளாதரத்தை படிக்கவும் மேலும் தி இந்து தமிழ் மற்றும் தினமனி நாளிதழில் பொருளாதாரம் குறித்த செய்திகளை தொடர்ந்து படித்து வரவும்
  • நடப்பு நிகழ்வுகளுக்கு தி இந்து தமிழ் தினமனி போன்ற நாளிதழ்களை படிக்கவும் மேலும் வலைதளங்களில் தேடி படிக்கவும் 6 மாதங்களுக்குள் நடந்த நிகழ்வுகளே அதிக அளவில் வரும்  
  • கணினி மற்று பிற அதாவது விளையாட்டு தொழிநுட்பம் மருத்துவம் போன்றவை தினசரி நாளிதழ்களை படித்தாலே போதும்.
வரலாறு குடிமையியல் புவியியல் உயிரியல் போன்ற அனைத்து பகுதிகளிலும் எவ்வாறு படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்பதை அடுத்து வரும் நாட்களில் பார்ப்போம்

கார்த்திக் பரமக்குடி
பீனிக்ஸ் தமிழன்




2 Comments:

  1. lakshmi narayanan kanchipuram8/28/2015 9:14 pm

    Thank for u information karthik sir ple send furthermore information thanks.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive