தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 கிராம நிர்வாக அலுவலரான -
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு,
தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கிறது.தமிழக வருவாய்த் துறையில் காலியாக இருந்த, 2,342
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2014 ஜூனில் எழுத்துத் தேர்வு நடந்தது; 7.63
லட்சம் பேர் பங்கேற்றனர்.
பின், டிசம்பரில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதில், 660 இடங்களுக்கு, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் யாரும் தேர்வாகவில்லை. இதையடுத்து, இரண்டாம் கட்ட காலி இடம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானோர் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
இரண்டாம் கட்டத்தில் காலியாக உள்ள, 660 இடங்களுக்கு, வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இந்த முறை, முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்பும், அதில் தேர்வாகும் தேர்வருக்கு, மறு நாளில் பணி நியமன கவுன்சிலிங்கும் நடத்தப்படும்.முழுவதும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வர்களின் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டு, அதன் படியே சான்றிதழ் சரிபார்ப்பும், கவுன்சிலிங்கும் நடக்கும். எனவே, மதிப்பெண் வரிசைப்படியே இடங்களையும் தேர்வு செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...