துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு
பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய
குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
இதுவரை, 1 லட்சத்து
61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.தமிழகத்தில்
துணை கலெக்டர் -19, டி.எஸ்.பி., - 26, வணிகவரி உதவி கமிஷனர் - 21,
மாவட்டப் பதிவாளர் - 8 என, மொத்தம் 74 காலியிடங்கள் இருக்கின்றன, இந்த
இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நவம்பர், 8ம் தேதி
தேர்வு நடத்துகிறது.
இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்'
மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில்
விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. நாளை நள்ளிரவு, 11:59 மணி வரை
விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை வரும் 11ம் தேதி வரை வங்கி மூலம்
செலுத்தலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன்
கூறும்போது, ''நேற்று மாலை, 6:00 மணி வரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர்
விண்ணப்பித்து இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருந்தாலும்,
கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தேர்வர்கள் முன்கூட்டியே பதிவுசெய்வது
நல்லது,''என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...