ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5
சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து
செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013
ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற மொத்த
மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16
ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்.
அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்த நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டது.இந்நிலையில் டெட் தேர்வு எழுதியவர்களில் முன்னேறிய வகுப்பினர் தவிர மற்ற பிரிவினருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
அரசின் புதிய உத்தரவால் 60 சதவீதத்திற்கு
கீழ் குறைந்த மதிப்பெண் பெற்ற 27 ஆயிரம் பேர் சான்றிதழ் சரி பார்ப்புக்கு
தகுதி பெற்றனர். இதனால் 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர்.மதிப்பெண் தளர்வை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட
தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் சென்னை உயர்
நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் மதிப்பெண் தளர்வு
வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இன்னொரு வழக்கில்
ஆசிரியர் நியமன நடவடிக்கையை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற
லாவண்யா என்ற பட்டதாரி உட்பட 17 பேர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை
எதிர்த்தும் 'வெயிட்டேஜ்' என்ற கூடுதல் தர மதிப்பீட்டை ரத்து செய்யக்
கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவை அனைத்தும்
ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டன.கடைசியாக இந்த மனுக்கள் கடந்த மாதம் 21ம்
தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்
போவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு
மனுவைத் தாக்கல் செய்துள்ளது. மனுவில் '5 சதவீத மதிப்பெண் தளர்வு முறை
இடஒதுக்கீட்டின் படி வழங்கப்பட்டது. அதை நீக்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த
மனு வரும் 18ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பரில்
உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கிட்டத்தட்ட
ஓராண்டுக்கு பின் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Nalla otranungaiya kaalatha
ReplyDeletematter old news new.n
ReplyDeleteobody knows how long will take. let we all wait with possitve hope
பி.எட் இரண்டாண்டு வழக்கு பற்றிய தகவல் பதிவிடுங்கள்.
ReplyDeleteபோங்கடா நீங்களும் உங்க நீதீமன்ற வழக்கும்!
ReplyDelete