மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மாநில அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் ஆசிரியராக சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு - 'டெட்' எழுதி
தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், மத்திய
இடைநிலை கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் பிற மாநில
பள்ளிகளில் பணியாற்ற, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும்.
இந்த ஆண்டுக்கான,'சிடெட்' தேர்வு,
செப்டம்பர் 20ம் தேதி, நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், அதில் உள்ள
தவறுகளை திருத்தம் செய்யலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.விண்ணப்பத்தில்
திருத்தம் செய்வதற்கு, http://ctet.nic.in/ இணைய தளத்தில், பதிவு எண்ணை
பதிந்தால், விண்ணப்பத்தை பார்க்க லாம். அதில் தவறுகள் இருந்தால் திருத்திக்
கொள்ளலாம். இன்று முதல் வரும், 25ம் தேதி வரை, இந்த வசதி செயல்பாட்டில்
இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...