தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்திய
தேர்வுக்கு இப்போது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.தேர்வாணையம் நேற்று
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பொது சுகாதார பணியில் அடங்கிய 12 புள்ளியியலாளர் பதவிக்கு 2011
பிப். 26ல் தேர்வு நடத்தப்பட்டது; இதில் 1262 பேர் கலந்து கொண்டனர்; அதில்
36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி.,
இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில்
49 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப்ரவரியில் நடத்திய
தேர்வு நடந்தது; இதில் 2934 பேர் கலந்து கொண்டனர்; அதில் 61 பேர் தேர்வு
செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு
உள்ளனர். அதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு
அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...