அரசு
அறிவித்த தேதிக்கு முன், ஈரோடு மாவட்டத்தில், ஆசிரியர் இடமாறுதல்,
'கவுன்சிலிங்' நடத்த முயன்றதால், ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே மோதல்
ஏற்பட்டது; பின், அதிகாரபூர்வமற்ற கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.
அனைத்து
அரசு தொடக்க பள்ளிகளுக்கும், நாளை மறுநாள், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்
நடத்த, தமிழக பள்ளிக்கல்வி செயலகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஈரோடு
மாவட்டம், சத்தியமங்கலம் ஒன்றியத்தில், மலை கிராம பள்ளிகளுக்கான இடமாறுதல்
கவுன்சிலிங், நேற்று, அதிகாரபூர்வமற்ற முறையில் நடத்தப்பட்டது.
இதற்காக,
நடுநிலைப்பள்ளி ஆசிரியர், 120 பேரை, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்
பள்ளியில் கூடுமாறு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் நாகராஜன், ராஜலட்சுமி
உத்தரவிட்டனர். மலை கிராமங்களில் உள்ள, 14 பள்ளிகளுக்கு, மலை சுழற்சி பணி
என்ற அடிப்படையில், கவுன்சிலிங் நடத்துவதாக ஆசிரியர்களிடம் கூறப்பட்டது.
இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, கவுன்சிலிங்கை நிறுத்துமாறு, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி மற்றும் உயரதிகாரிகளிடம், ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.உயரதிகாரிகள் தலையிட்ட பின், கவுன்சிலிங் நிறுத்தப்பட்டது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...