சிறந்த தமிழ் நுாலுக்கான பரிசு பெற
விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பவித்ரம்
தொண்டு நிறுவனம் சார்பில், ராமமூர்த்தி நினைவு அறக்கட்டளை நுால் பரிசளிப்பு
விழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த நுாலை எழுதிய,
ஐந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு, இம்மாதம், 30ம் தேதி, சென்னையில் நடைபெறும்
விழாவில், பரிசு வழங்கப்பட உள்ளது.
தமிழ் பக்தி இலக்கியத்திற்கும், தமிழ் அறிவியல்
இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு ஆண்டும், சிறந்த
நுால்களை, தேர்வு செய்து வருகிறோம்.
எனவே, விருது பெற விரும்புவோர், இந்த ஆண்டு
அறிவியல் மற்றும் ஆன்மிகத்தில் வெளியான தமிழ் நுால்களின் இரண்டு பிரதிகளை,
பாபுசேனன், செயலர், பவித்ரம், ராமமூர்த்தி அறக்கட்டளை நுால் பரிசு திட்டம்,
4, ஜெ.டி.துரைராஜ் நகர், எம்.எம்.டி.ஏ., வாட்டர் டேங்க் ரோடு, சென்னை - 29
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என, பவித்ரம் தலைவர் ரகுநாதன்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...