சமீபகாலமாக, துள்ளி விளையாடவேண்டிய பள்ளி பருவத்தினர் உட்பட,உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது... ஆசிரியர் சிறிதுகடிந்து பேசினால்கூட, விபரீதமுடிவுக்கு செல்லும் நிலையை பார்க்கமுடிகிறது!
விளைவு, கல்லூரியிலும் உளவியல்பிரச்னைகளுக்கு ஆளாகும்மாணவர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கிறது. எதிர்காலத்தில்ஏராளமான பிரச்னைகளைதிடகாத்திரமாக எதிர்கொள்ளவேண்டிய இளைஞர்கள், இன்று சிறுசிறு ஏமாற்றங்களுக்குக்கூட மனம்உடைந்துபோகும் சூழல் மிகஆபத்தானது.
இதனை உணர்ந்த அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் சென்னைபல்கலைக்கழகம், ஒவ்வொருகல்லூரியிலும் உளவியல் நிபுணர்கள்இருக்க வேண்டும் எனஅறிவுறுத்துகிறது. மாணவர்களின்உளவியல் பிரச்னைகள்கண்டறியப்பட்டு, அவற்றில் இருந்துவெளிவர உரிய ‘கவுன்சிலிங்’தேவைப்படுகிறது. இதில், ஆசிரியர்கள்,கல்வி நிறுவனங்களுக்கான பங்குஅதிகம்!
பள்ளி படிப்புவரை தங்களதுகுழந்தைகளை தீவிரமாககண்காணிக்கின்றனர். ஆசிரியர்-பெற்றோர் கூட்டத்தில் தவறாமல்கலந்துகொள்கின்றனர். அதிகமதிப்பெண்களை சுற்றியே அவர்களதுஎண்ணவோட்டம் உள்ளது. கல்லூரிஎன்று, மாணவர்கள் சென்ற பிறகு,அவர்களை கவனிக்க பெற்றோர்தவறிவிடுகின்றனர். மாணவர்களின்வளர்ச்சியில், பெற்றோரது பங்கும் மிகமுக்கியம்.
மதிப்பு கூட்டு படிப்புகள்
கடின உழைப்பு, தொடர் முயற்சி,தெளிவான எதிர்கால திட்டம் ஆகியமூன்றும் இருந்தால் நிச்சயம்வெற்றியாளாராக முடியும். மாறாக,பெரும்பாலானோர் குறுகிய திட்டத்தைமட்டுமே நோக்கி பயணிக்கின்றனர்.போட்டி அதிகம் மிகுந்த இன்றையகாலகட்டத்தில், தகுந்த வேலைவாய்ப்பைப் பெற, ஒவ்வொருவரும்தன்னை தகுதியுள்ளவராகஉயர்த்திக்கொள்ள வேண்டியுள்ளது.
வெறும் கல்லூரி பாடத்திட்டத்தைமட்டும் படித்து, தேர்ச்சி பெற்றால்போதாது. மதிப்பு கூட்டு படிப்புகளைஅனைத்து மாணவர்களும் படிக்கவேண்டியது அவசியமாகிறது. ‘பட்டப்படிப்பிற்கு மட்டுமே வேலை’என்பது எளிதல்ல; கூடுதல் தகுதியைவளர்த்துக்கொள்வதும் முக்கியம்.உதாரணமாக, வேலை பெற பி.காம்.,பட்டம் மட்டும் பொதாது; ‘டேலி’ படிக்கவேண்டியது கட்டாயம்.
ஆய்வின் அவசியம்
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில்ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைவாகஇருப்பது கவலை அளிக்கிறது.அரசாங்கமும், பல்வேறுஅமைப்புகளும் ஆராய்ச்சிக்காகஏராளமான நிதி ஒதுக்கிவைத்துஉள்ளன. கல்வி நிறுவனங்கள்அவற்றை பயன்படுத்தி, முறையாகஆய்வில் ஈடுபட வேண்டும். தேசம்,சமுதாயம் மற்றும் கல்வி நிறுவனத்தின்முன்னேற்றம் மட்டுமின்றி ஒருவரது சுயமுன்னேற்றத்திற்கும் ஆய்வுகளும்,புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம்.
மொபைல், கம்ப்யூட்டர், பேஸ்புக்,தொலைக்காட்சி ஆகியவற்றில் உள்ளஆர்வமும், அர்ப்பணிப்பும் கற்றலிலும்,திறன் வளர்ப்பிலும் இருந்தால் நமதுஇளைஞர்களின் பலத்தைக் கண்டுஉலகமே வியக்கும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...