Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிட்டால் வழுக்கைத்தலை நிச்சயம்: பகீர் தகவல்

         எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.

         பெங்களூரில் உள்ள பிரபல கிளினிக்கில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களில் 92 சதவீதம் பேரின் ரத்தத்தில் 'பிஸ்பெனால் ஏ' (BPA) எனப்படும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடி உதிர்வில் தொடங்கி 70 சதவீதம் வளர்சிதை (மெட்டாபாலிஸம்) பிரச்சனைகளுக்கு இதுவே மூல-முதல் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, 'மைக்ரோ ஓவென்' மூலம் உணவை சூடுப்படுத்தி, அவற்றை 'அரக்கப்பரக்க' பிளாஸ்டிக் டப்பாக்களுக்குள் திணித்து கொண்டு செல்வதால் சமநிலையற்ற சூடுபடுத்தல் காரணமாக அந்த உணவில் உள்ள சில வகை சத்துக்கள் 'பிஸ்பெனால் ஏ' (BPA) பாதிப்புக்கு உள்ளாகி விடுகின்றது.
இந்த பாதிப்பினால் முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலை சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிகையும் பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive