திண்டுக்கல்லில் நேற்று நடந்த தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் சீனியாரிட்டியில் குளறுபடி இருப்பதாக கூறி ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.இந்த கவுன்சிலிங் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
சாணார்பட்டி அருகே கணவாய்ப்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமுதாவிற்கு சீனியாரிட்டி வழங்கவில்லை என கூறி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தலைமையில் ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.பின் சீனியாட்டியில் ஆசிரியரின் பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிட்டனர். இரண்டு கவுன்சிலிங்கிலும் 23 பேருக்கு இடமாறுதல் உத்தரவும், 26 பேருக்கு பதவிஉயர்வு உத்தரவும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...