தனியார்
பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் ஆண்டுக்கு, ஆண்டு
அதிகரித்து வருகிறது&'&' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்
தெரிவித்தார்.
ரூ.15 லட்சத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த
கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணம். ஆறாம் வகுப்பு படிக்கும் சராசரி
மாணவர் 2-ம் வகுப்பு தொடர்
சொற்களை திறம்பட எழுத தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் வரை 27 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளியில் பயின்றனர்.
இன்று 35 சதவீதமாக
உயர்ந்துவிட்டது. அரசு தன் கடமையை சரிவர செய்வதில்லை. ஏழை குழந்தைகள் கூட தனியார்
பள்ளியில் படிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் கல்விக்கு நிறைய கொடுக்க வேண்டும்.
பில்கேட்ஸ் தான் சம்பாதித்ததில்
ஒரு பகுதியை மட்டும் தன் மகன்களுக்கு கொடுத்து விட்டு, மீதியை அறக்கட்டளையின் நற்காரியங்களுக்காக
செலவிடுகிறார். வெளிநாட்டில் மட்டுமே இருந்த இந்த முறை, நம் இந்தியாவிலும் பரவி வருகிறது, என்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா
பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...