தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் செய்திகளை அறிந்துகொள்ள உதவும் செயலியை (ஆப்ஸ்) ஹைதராபாதைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. `
வியூஸ்’ என்ற பெயரிலான இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் செல்போனில் செய்திகளைஅவரவர்க்கு விருப்பமான பிராந்திய மொழிகளில் தெரிந்து கொள்ள முடியும்.
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரிலிருந்து இந்த செயலியை பதிவிறக்கம்செய்ய முடியும் என்று இதன் நிறுவனர் ஸ்ரீனி கொப்போலு தெரிவித்துள்ளார். இந்தியாவில் 10 பிராந்திய மொழிகளில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியில் ஒரு லட்சத்துக்கும் மேலான செய்தி கள், பொதுவான செய்திகள், தொழில்நுட்பம் சார்ந்தவை, வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஃபேஷன், சுற்றுலா மற்றும் அது சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த செயலி காப்புரிமை பெறப்பட்டதாகும். 40 நாடுகளில், 2000 நகரங்களில் நிகழும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இதில் நிச்சயம் இடம்பெறும் என்று அவர் மேலும்கூறினார். வியூஸ் செயலியை பின்வரும் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்ய முடியும். இணையதள முகவரி www.veooz.com
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...