‘உன் நண்பனைக் காட்டு நீ யாரென்று சொல்கிறேன்’ என்ற பழமொழியை தகர்த்தெறியும் வகையில், நம்மைப் பற்றி அறிய வீட்டிலுள்ள தூசி, துரும்புகள் போதும் என சொல்லும்படி சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
நமது கண்ணுக்கு தெரியவில்லை என்றாலும் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட நுண்ணியிரிகள் வாழ்வதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். அமெரிக்காவின் கோலராடோ பல்கலைக்கழகமும், வட கேரொலினாவின் மாநில பல்கலைக்கழகமும் நுண்ணுயிர்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது, நமது வீடுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், அங்கே வசிப்பவர் ஆணா? அல்லது பெண்ணா? விலங்குகள் வளர்க்கின்றனரா எனப் பல கேள்விகளிக்கு விடையளிக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
அமெரிக்காவில்
சுமார் 1200 வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒவ்வொரு வீட்டிலும்
சுமார் 5 ஆயிரம் வகை பாக்டீரியாக்களும், 2 ஆயிரம் வகை பூஞ்சைகளும்
கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆண் மட்டுமே வசிக்கும் வீட்டிலிருக்கும்
பாக்டீரியாக்கள் பெண்கள் இருக்கும் வீடுகளிலிருந்து மாறுபடுவதை அறிய
முடிகின்றது.
இந்த கண்டுபிடிப்பு, அலர்ஜிக்களைப் பற்றி அறிந்து கொள்ள உபயோகமானதாக இருக்கும். அத்துடன், கைரேகை, ரத்தம், முடி போன்றவற்றை வைத்து பல முக்கிய வழக்குகளை தீர்த்துவைக்கக்கூடிய தடயவியல் துறையினருக்கு, இந்த ஆய்வு முடிவு வேலையை சுலபமாக்கும் என நம்பலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...