ஒளியாற்றலை
சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள வாய்ப்பு, சவால்கள்' குறித்து
பள்ளி மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கு ஆக., 31ல் சென்னையில்
நடக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா
தொழில்நுட்பநிறுவனம் இணைந்து தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல்
கருத்தரங்குகளை நடத்துகின்றன. தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு 'ஒளியாற்றலை சமுதாய நற்செயலுக்கு பயன்படுத்துவதில் உள்ள
வாய்ப்பு, சவால்கள்' என்ற கருத்தரங்கு நடத்த உள்ளன.
இதுகுறித்து
6 நிமிடத்திற்குள் மாணவர்கள் விளக்கம் அளித்து, நடுவர்களின் கேள்விகளுக்கு
பதில் தர வேண்டும். கல்வி மாவட்ட அளவில் முதல் இரண்டு இடம் பிடிக்கும்
மாணவர்களுக்கு ஆக., 7ல் மாவட்ட அளவிலான கருத்தரங்கு நடக்கும்.தேசிய
கருத்தரங்கு: அதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தேசிய
கருத்தரங்கு ஆக., ௩1ல் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...