‘பிளட் மூன்’ என்பது பொதுவாக பேரழிவிற்கு எச்சரிக்கையளிக்கும் கடவுளின்குறியீடாக பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களால் கருதப்படுகிறது.
இது முழுச்
சிவப்பாக பார்க்கவே திகிலூட்டும் வகையில் இருப்பதனால் அவ்வாறு
நம்பப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இச்சிவப்பு நிலா
சென்னையில் நேற்று தோன்றியது.
3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது
படும். பூமி கடந்து செல்லும் தூரம், சூரியன்-பூமி-நிலா ஆகிய கோள்கள்
இடையிலான கோணம் போன்றவற்றின் அடிப்படையிலேயே சந்திர கிரகணம் நேரம் அமையும்.
சந்திரன் பொதுவாக சூரியனிடமிருந்தே ஒளியைப் பெறுகிறது என்றாலும், கிரகணம்
நிகழும்போது பூமியின் நிழலில் நிலா இருக்கும்போதும், அதன் மேற்பரப்பை சில
ஒளிக்கதிர்கள் தாக்குவதால் அது ரத்த சிவப்பாக தோன்றுகிறது. இந்த
காரணத்தினாலேதான் சூரியன் மறையும்போது வானமும் அவ்வப்போது, ஆரஞ்சு, சிவப்பு
மற்றும் பஞ்சு மிட்டாய் நிறங்களில் காட்சியளிக்கிறது.
சந்திர கிரகணம் பொதுவாக முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் என 2
வகைப்படும். பகுதி சந்திரகிரகணம் வருடத்திற்கு 3 தடவையும், முழு
சந்திரகிரகணம் வருடத்திற்கு ஒரு முறையும் தெரியும்.
நேற்று மாலை கடற்கரைகளில் இருந்து இந்த முழு சிவப்பு நிலாவை பலர்
கண்டுகளித்தனர். மாலை சுமார் 6.30 மணிக்கு முழு பெளர்ணமியில் நிலா சிவப்பாக
தோன்றியது. சிறிது நேரம் மேகத்துக்குள் மறைந்திருந்தாலும், நிலாவை
சுற்றிலும் சிவப்பு நிறமாக அழகாகவே தோன்றியது.
இதனைத்தொடர்ந்து இரவு 7.15-7.30 வாக்கில் நிலா முழுவதும் மஞ்சள் நிறத்தில்
காட்சியளித்தது. தொடர்ந்து, மஞ்சள் நிறம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது.
பின்னர் சந்திரன் எப்போதும் போல வெண்மை நிறத்தில் மாறியது.
சென்னை கடற்கரைகளிலும், கோளரங்கத்திலும் ஏராளமான பொதுமக்கள்
சந்திரகிரகணத்தை கண்டுகளித்தனர். இதே போல தமிழகத்தின் பல பகுதிகளிலும்
இந்தச் சந்திரகிரகணம் தெரிந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...