தமிழகத்தில்
2003 ஏப்., 1க்கு பின் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர், ஆசிரியர்களுக்கு
புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 2006 ஜூன் 1 முதல்
ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்தொகையுடன், அரசின் பங்கையும் சேர்த்து மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று
மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில்
ஊழியர்களிடம் பிடித்தம் செய்த
ரூ.5,000 கோடியும், அரசின் பங்கு தொகையும் இதுவரை ஆணையத்திடம்
செலுத்தப்படவில்லை. இதனால் 12 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற, இறந்த ஊழியர்,
ஆசிரியர்கள் 1000 பேருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில்
முறையாக பணம் செலுத்தியதால் 7,000 பேருக்கு பணப்பலன் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ளார்.அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மேலுாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே உயர்நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்றுள்ளார். மற்றவர்கள் வழக்கு தொடர முடியாமல் உள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...