'எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3
சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி.,
முகவராக பணிபுரிகிறார். மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள்
பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது
பிரிவினருக்கு, 410; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 146; ஆதி
திராவிடர் வகுப்பினருக்கு, 95; பழங்குடியினருக்கு, மூன்று மற்றும்
பின்னடைவு காலியிடங்கள் என, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு பற்றிய, எந்த குறிப்பும் அதில் இடம்
பெறவில்லை. சட்டப்படி, 3 சதவீத பணியிடங்கள், மாற்று திறனாளிகளுக்காக
ஒதுக்கப்பட வேண்டும்.
எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு, 3
சதவீத இடங்களை ஒதுக்கி, புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன்
பிறப்பித்த உத்தரவு:மாற்று திறனாளிகளுக்கு, சட்டப்படி வழங்க வேண்டிய, 3
சதவீத இடங்களை, எல்.ஐ.சி., நிர்வாகம் வழங்க தவறி விட்டதாக, மனுதாரர்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத
இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கான, 3 சதவீத இடங்களை
நிரப்ப, தனியாக விளம்பரம் வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தர
விட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...