எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய
போட்டிகளில் வெல்லும் பள்ளி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு அழைத்து
செல்லப்பட உள்ளனர்.
பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி கழகம் சார்பில்
பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டிகள்
நடத்தப்படுகின்றன. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகளை சம்பந்தப்பட்ட பள்ளியே நடத்தி முதலிடம் பிடிக்கும் மாணவர்
பட்டியலை புதுடில்லியில் உள்ள பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி மையத்திற்கு
competitions2015@pcra.org என்ற 'இ மெயில்' முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
போட்டிகளை செப்., 30 க்குள் முடிக்க வேண்டும்.
கட்டுரை போட்டியை தமிழ், ஆங்கிலம், இந்தி
உள்ளிட்ட 23 மொழிகளில் நடத்தலாம். இரண்டு போட்டி களிலும் தேசிய அளவில்
பரிசுகள் வழங்கப்படும். கட்டுரை போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு மொழிக்கும்
தலா 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக 'லேப்டாப்,' ரூ.30
ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து
செல்லப்படுவர். இரண்டாவது பரிசாக 'டேப்,' ரூ.20 ஆயிரம் ரொக்கம், 3 வது
பரிசாக 'டேப்,' ரூ.15 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும். ஓவிய போட்டியில் 10
பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
விபரங்களுக்கு www.pcra.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...