பள்ளிக்கல்வி இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள, 67 கல்வி மாவட்டங்கள்;
தொடக்கக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, 140க்கும் மேற்பட்ட
தொடக்கக் கல்வி மாவட்டங்கள்; மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன அலுவலகங்களில்
பணியாற்றும் ஆசிரியர், 350 பேருக்கு விருது வழங்கப்படும்.
இத்துடன், மெட்ரிக் இயக்குனரகக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர், 20 பேருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. குறைந்தபட்சம், 15 ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்தவர், இந்த விருதுக்கு தகுதியானவர். தலைமை ஆசிரியர் பெயரும்,விருதுக்கு தேர்வு செய்யப்படுகிறது.
நிபந்தனைகள்:
* மாணவர் நலனுக்காக பாரபட்சமின்றி பணியாற்றி இருக்க வேண்டும்.
* கல்விச் சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
* எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு இருக்கக் கூடாது.
* ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையிலான குழு,
தற்காலிக பட்டியல் தயாரித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் வழங்க
வேண்டும். அவர், ஆக., 3ம் தேதிக்குள் நேர்காணல் நடத்தி, ஆறு பேர் கொண்ட
தேர்வு பட்டியலை, இடைநிலைக் கல்வி இணை இயக்குனர் தலைமையிலான மாநிலக்
குழுவுக்கு அனுப்ப வேண்டும். இந்தக் குழு, இறுதி பட்டியலை தயாரித்து,
அரசுக்கு அனுப்பும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...