வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வரும் சனி
மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்பு கவுன்டர்கள் திறந்திருக்கும்' என,
வருமானவரி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கம்:சென்னை நுங்கம்பாக்கம்
வருமான வரி ஆணையர் அலுவலக வளாகத்தில், 2014-15ம் ஆண்டுக்கான, வருமான வரி
கணக்குகளை தாக்கல் செய்ய, சிறப்பு கவுன்டர்களை, முதன்மை ஆணையர் அஜித்குமார்
ஸ்ரீவத்சவா நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, ஆணையரகம் வெளியிட்டுள்ள
அறிக்கை:வரும், 31ம் தேதிக்குள், வருமான வரி கணக்குகளை தாக்கல்
செய்யவேண்டும். இதற்காக, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், கவுன்டர்கள்
திறந்திருக்கும். இந்த பணியில், ௨௫௦ பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு
இடைவேளையின்றி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை, கவுன்டர்கள்
செயல்படும்.
தனி கவுன்டர்:மாத ஊதியம் பெறுவோருக்காக, 30
கவுன்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு என, தனி
கவுன்டர் உள்ளது. 'பான்' எண்ணை சரிபார்க்க 10 கவுன்டர்கள் உள்ளன. வருமான
வரி விசாரணைகளுக்காக, தனி உதவி மையங்கள் செயல்படும்.
கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பிக்க உதவி
மையமும் திறக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் வருமான வரி எல்லைக்கு உட்பட்ட
வருமான வரி செலுத்துவோர், அங்கு திறக்கப்பட்டுள்ள கவுன்டர்களில், கணக்குகளை
தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...