தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க, தமிழகத்தில் ஐந்து கல்லுாரிகள் உட்பட, 49 கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.
கலை
மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தொழிற்கல்வி படிப்புகளை தொடங்க,
யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்கலை மற்றும்
கல்லுாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பரிசீலனை
முடிந்து, நாடு முழுவதும் 49 கல்லுாரி மற்றும் பல்கலை யில் தொழிற்கல்வி
பட்டப்படிப்பு தொடங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், திருச்சி பிஷப் ஹெபர் கல்லுாரி (கணக்குப் பதிவு மற்றும் வரிக் கணக்கீடு), மதுரை லேடி டோக் கல்லுாரி (மருத்துவ சேவை மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்), பெரியார் பல்கலை (துணிநுால் வடிவமைப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்), சென்னை ஸ்டெல்லா மேரிஸ் (உணவு பதப்படுத்துதல் மற்றும் தர நிர்ணயம், நிலைக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை), விருதுநகர் இந்து நாடார் கல்லுாரி (சுற்றுச்சூழல் கணக்கீடு மற்றும் தீர்வு நடவடிக்கை) ஆகிய ஐந்து கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக, 7.9 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 337 கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, தொழிற்கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...