கடந்த 18-ஆம் தேதி இந்திய-சீன எல்லை
கண்காணிப்பின்போது, தவாங் மாவட்டத்தில் ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற
மலையில் இருந்து மற்றொரு மலைக்கு வான்வழி கம்பி வடம் அமைக்கும் பணியில்
அண்ணாமலையும், அவரது குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட மலைச்சரிவின்போது உடனிருந்த
ராணுவ வீரர்களை பத்திரமாக காப்பாற்றி வேறொரு இடத்துக்கு அனுப்பி வைத்த
அவர், இறுதியாக அவர் வெளியேறும்போது மலைச்சரிவில் பெரிய பாறை உருண்டு
விழுந்ததில் வேலூர் மாவட்டம்,கணியம்பாடியை அடுத்த பெரியபாலம்பாக்கம்
கிராமத்தைச் சேர்ந்த சுபேதார் ஜி.அண்ணாமலைஉயிரிழந்தார்.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...