கலையாசிரியர்களுக்கான புதிய பாட திட்டம் (சிலபஸ்) தயாரிக்கும் பணி நிறைவு
பெற்றுள்ள நிலையில், புதிய சிலபஸை எதிர்நோக்கி ஆசிரியர்கள்
காத்துள்ளனர்.மாநிலத்தில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட சிறப்புப்
பாடங்களுக்கு, கல்வித் துறையால் வரையறை செய்யப்பட்ட 'சிலபஸ்' இல்லாததால்,
ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர்கள், தங்கள் விருப்பம் போல்,
பாடங்களை போதித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், அந்த
மாவட்ட கல்வித் துறை சார்பில், ஓவிய பாடத்துக்கான, பழைய பாட திட்டம்
வெளியிடப்பட்டது. 'மாநிலம் முழுக்க ஒரே சீரான பாடத் திட்டத்தை கொண்டு வர
வேண்டும்' என, தமிழ்நாடு கலையாசிரியர் நலச்சங்கம் உட்பட பல அமைப்புகள்,
முதல்வருக்கு மனு வழங்கின.விளைவாக, சிறப்புப் பாடங்களுக்கு புதிய சிலபஸ்
தயாரிக்கும் பணி, பணிமனை மாநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இயக்குனர்
தலைமையில், இரு கட்டமாக நடந்து முடிந் துள்ளது. இதில், ஓவியத்திற்கான புதிய
பாடத் திட்டம், சென்னை கவின் கலைக் கல்லுாரி பேராசிரியர்கள் ஆலோசனை படி,
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 8 ஆசிரியர்கள் அடங்கிய குழு
தயாரித்துள்ளது.அதில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு புள்ளி, கோடு, வடிவம், 7,
8 வகுப்பு மாணவர்களுக்கு கற்பனை ஓவியம், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு
காகிதங்களை வெட்டி ஒட்டுதல், சோப்பு கட்டிங் தயாரித்தல், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு வரலாற்று சின்னங்கள், குகை ஓவியங்கள், நாகரிக உடைகள் உட்பட
ஓவியம் தொடர்பான 'சிலபஸ்' தயாரிக்கப்பட்டுள்ளது; சமச்சீர் கல்வி
திட்டத்தின் படி 'கிரேடு' முறையில் மதிப்பெண் வழங்கும் திட்டமும், புதிதாக
'சிலபஸ்' திட்டத்தில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது என, கூறப்படுகிறது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார்
கூறுகையில்,“ஓவியம், இசை, உடற்கல்விக்கான புதிய சிலபஸ் தயாரிக்கும் பணி
நிறைவு பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய சிலபஸ், நடப்பாண்டு முதலே
அமலுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...