திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில்
கூறியிருப்பதாவது:மக்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தில்
M.K.Stalin என்ற செல்போன் செயலி சேவையை நான் தொடங்குகிறேன்.
இது
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வின்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் செயல்படும். இதன்
மூலம் பொதுமக்கள், அவர்களது தொகுதியிலும், மாநில அளவிலும் உள்ள
பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். இந்த செயலியில் வரும்
அறிவிப்பு கள் மூலம் எனது உரைகள், அண்மை செய்திகள், கருத்துகள் மற்றும்
என்னுடைய பத்திரிகை குறிப்புகள் போன்றவற்றை பொது மக்கள் தெரிந்துகொள்ள
முடியும்.கொளத்தூர் தொகுதி மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவிக்கவும்,
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை செலவு செய்வதற்கான ஆலோசனைகளை
வழங்கவும்இந்த செயலியில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர்
தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் தீர்வு காணப்பட்ட பிரச்சினைகள்
குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...