Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'மது ஒழிக்க போராடும் மாணவர்கள் :தமிழ் ஒழிப்பை எதிர்த்து போராடலாம்'

      சென்னை:'மது ஒழிப்புக்காக போராடும் மாணவர்கள், தமிழ் ஒழிப்பை தொடர்ந்து செய்யும், கல்லுாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக போராட லாம்' என, எழுத்தாளர் சாருநிவேதிதா பேசினார்.

        'பியானோ டீச்சர்''விருட்சம்' அமைப்பின் இலக்கியச் சந்திப்பு, தி.நகர் அலமேலு மங்கா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா பேசியதாவது: இன்றைக்கு, தமிழ் மொழி ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே பயன்படுகிறது. பண்பாட்டு சாதனமாக இல்லை. இலக்கியத்தை, ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியை, பல்கலை துணைவேந்தர், விஞ்ஞானி, ஆட்டோ ஓட்டுனர் என்று, அனைத்து தரப்பினரும் கேட்கின்றனர். இலக்கியம் இல்லாத மொழியில், பண்பாடு இருக்காது. அதற்கு, பல உதாரணங்கள் உள்ளன.

தாய்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் இலக்கியம் கொஞ்சம்கூட இல்லை. செய்தித் தாள்களை கூட, அவர்களின் தாய்மொழியில் படிப்பது இல்லை. அவர்களுக்கு, சம்பாத்யம், மனைவி, வீடு அவ்வளவுதான் வாழ்க்கை.

ஐரோப்பாவில், மொழிப்பற்று அதிகம். அவர்களின் தாய் மொழியில் ஒரு பாடத்தையாவதும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், தமிழகத்தில், அந்த நிலை இல்லை.
நான் தமிழ் எழுத்தாளராக இருந்தாலும், என் மகன் தமிழ் படிக்கவில்லை. அதற்கு நான் காரணம் அல்ல. அவனை சூழ்ந்திருக்கும் காரணிகள்தான் காரணம். அவன் பள்ளியில், தமிழ் மொழிக்கு, 35 மதிப்பெண் கொடுக்கும் வேளையில், பிரெஞ்சு மொழிக்கு 90 மதிப்பெண்கள் கொடுக்கின்றனர். அவன் தேவையை, அவன் சுதந்திரமாக தேர்ந்தெடுத் தான்.
எல்பிரட் ஜெலினக் என்ற, ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய, 'பியானோ டீச்சர்' என்ற நாவல், இணையதளத்தில் கிடைக்கிறது. உலக அளவில், பெரிய அளவில் பேசப்படுகிறது.
ஆனால், என் பழுப்பு நிற பக்கங்களுக்காக, தஞ்சை பிரகாஷ் எழுதிய, 'கரமுண்டார் வீடு' நாவலை தேடினேன். கிடைக்கவில்லை. அதன் நகலை வாங்கித்தான் படித்தேன். அந்த நாவலுக்கு அருகில், 'பியானோ டீச்சர்' வரவே முடியாது. அந்த அளவுக்கு, பெண்ணின் மனநிலையை செறிவுடன் அந்த நாவலில் பிரகாஷ் சொல்லி இருக்கிறார்.

தமிழில் எழுத்தாளர்களின் நிலைமை மிக கொடுமையானது. தஞ்சை பிரகாஷ், லா.ச.ரா., டி.ஜே.ரங்கநாதன், மவுனி, சி.சு.செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராமன் போன்ற அருமையான எழுத்தாளர்களை, தமிழ் சமூகம் மறந்து விட்டது.
ஜெயகாந்தன் சொன்னது போலவே, நானும், மவுனியின் கதைகளை திரும்ப திரும்ப படிப்பேன். என் குருநாதர்களில் அவரும் ஒருவர்.

தமிழ் ஒழிப்பு:நம் சங்க இலக்கியங்களில், பூ, கனி, மரம், மலை என, அனைத்து இயற்கையையும் புரிந்து வைத்திருந்ததை காண முடிகிறது. அதுதான், வாய் வழி இலக்கியமாக, இன்றளவும் கிராமங்களின் பண்பாடாகவும் நிறைந்திருக்கிறது. இலக்கியவாதிகளால் மட்டுமே இலக்கியம் படிக்கப்படுகிறது. இன்று, அரசு உதவிபெறும் பல கல்லுாரிகளில், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கின்றனர். இவ்வாறு, தமிழகத்தில் இருக்கும் கல்விக் கூடங்கள் திட்டமிட்டு தமிழை ஒழிக்கின்றன. ஆனால், அவற்றின் வளர்ச்சிக்கு, தமிழக மக்களின் வரிப்பணம் தேவைப்படுகிறது.

மது ஒழிப்புக்காக போராடும் மாணவர்கள், தமிழ் ஒழிப்பை தொடர்ந்து செய்து வரும் கல்லுாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக போராடலாம். தமிழையும், இலக்கியத்தையும் காக்க, கொரில்லா போல மாற வேண்டும்.இவ்வாறு, எழுத்தாளர் சாருநிவேதிதா பேசினார்.
'விருட்சம்' இலக்கிய அமைப்பின் தலைவர் ஆடிட்டர் கோவிந்தராஜன், செயலர், எழுத்தாளர் அழகியசிங்கர், 'சிறகு' ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive