Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாசம் பொறந்தா சம்பளம் கேட்கிறார்கள் ஆசிரியர்கள்

      மத்திய அரசு கல்வி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவதில், தொடர்ந்து சிக்கல் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அரசு ஆணை பிறப்பித்த பின், ஊதியம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

       மத்திய அரசு நிதி:மத்திய அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, தமிழக பள்ளிக்கல்வித் துறை வழியே  செயல்படுத்த, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆசிரியர் பணியிடங்கள்உருவாக்கப்பட்டு, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

            இதேபோல், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளும், இந்த திட்டங்களின் கீழ் கொண்டு வரப்பட்டு, அதன் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஊதியம் வழங்கப்படுகிறது.
 
          அரசாணை:ஆனால், அந்த பணியிடங்கள் நிரந்தரமாக்கப்படாமல், ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை, அவ்வப்போது புதுப்பிக்கப்படும் வகையில் உள்ளன. எனவே, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், தனியாக அரசாணை பிறப்பித்த பின், கருவூலத்தில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த அரசாணையை பிறப்பிக்க, ஒவ்வொரு மாதமும் காலதாமதம் ஏற்படுவதால், ஊதியம் வழங்குவதும் தாமதமாகிறது.

         தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கு, கடந்த மாத ஊதியம், நிறுத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''மாதம் துவங்கும் முன், உரிய முறையில் ஆணை பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.




4 Comments:

  1. In Tamil Nadu. Many gvt servants are......,bt only teachers have this prblm........

    ReplyDelete
  2. SIR THE PROBLEM IS NOT FROM THIS YEAR SINCE 99 ONWARDS.WE ARE UPGRADED HR SEC SCHOOL IN 1999.ONLY THE PG TEACHERS HAVE TO GET G O FOR PAY ORDER TO GET SALARY.THE PROBLEM YET TO BE SOLVED, THE ACCOUNT HEAD AT STATE TREASURY ACCOUNTS DEPT KEEPS US UNDER TEMP POST HEAD.

    ReplyDelete
  3. Are teachers asking any bribe? they ask only salary? Is it wrong?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive