அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.
இது தவிர அரசு திறனாய்வுத்தேர்வு, உதவித்தொகை, பிற்பட்டோர், சிறுபான்மையின நலம் உள்ளிட்ட பிற துறைகள் சார்பில் மாணவர்களுக்குஉதவிகள் வழங்கப்படுகிறது. அரசு, தனியார், சிறுபான்மை பிரிவு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த முழுமையான விபரங்களை, பல்வேறு வகைகளில் பட்டியலிட்டு வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
குறைந்த கால அவகாசத்தில் கேட்கப்படும் தகவல்களை அளிக்க, பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர், இன்டர்நெட் சேவை இருந்தபோதும் பயன்பாடின்றியோ, பழுதுநீக்கம் செய்வதில் அலட்சியத்தாலோ காட்சிப்பொருட்களாக உள்ளன. சில பள்ளிகளில் இவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப திறன் வாய்ந்த ஊழியர்களோ, ஆசிரியர்களோ இல்லை. இதையடுத்து புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்த்தல் பணிக்காக, பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கும் அவலம் நீடிக்கிறது.ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ""அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள சூழலில், சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களும்பல்வேறு பணிகளுக்காக மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களுக்கு அழைக்கப்படுகின்றனர்.
பிற பணிகளில் கால விரயம் ஆவதால், வகுப்புகளில் பாடங்களை உரிய காலத்திற்குள் முழுமையாக நடத்தி முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தனியார் இன்டர்நெட் மையங்கள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்வதால், பல பள்ளிகளின் தலைமையாசிரியர்களை எந்தவித பணிக்காகவும் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிக்கிறதுல '' என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...