காரைக்காலில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில்
தலத்தெரு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் முதல் முறையாக காரைக்காலில்
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் குறித்து கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் குமார் தலைமை தாங்கினார். காரைக்கால்
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் 240 பேர் கலந்தாய்வில் கலந்து
கொண்டனர். ஆசிரியர்கள் விருப்பத்தில் மாறுதல் வழங்குவதற்கு தேர்வு
செய்யப்பட்டது. மாவட்டத்தில் 60 இடங்கள் காலியாக உள்ளது. இதை விரைவில்
நிரப்பப்படும் என்று அதிகாரி தெரிவித்தனர். புதுச்சேரி கல்வித்துறை இணை
இயக்குனர் பார்த்தசாரதி, முதன்மைக் கல்வி அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...