பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி, இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூட நேரம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் நேராக வீட்டுக்கு செல்லவேண்டும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துதல்.
* கடல், குளத்தில் மாணவர்கள் குளிக்கக்கூடாது
* கடல், ஏரி, குளம், குட்டை ஆகிய எந்த நீர் நிலைகளிலும் மாணவ-மாணவிகளை குளிக்கக்கூடாது என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.
* பள்ளிக்கூடங்களில் புதர்கள், பழைய மரங்கள் விழும் நிலையில் இருந்தால் அவற்றை அகற்றுதல்.
* மாணவ-மாணவிகள் நீர் நிலைகளுக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தொட்டிகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் இருக்கவேண்டும். அவை மூடப்பட்டு இருக்கின்றனவா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்தல்.
* இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாக்க அவர்களை மரங்கள் அடியில் ஒதுங்கக்கூடாது என்று சொல்லுதல்.
* பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள மின்சார சுவிட்சுகள் சரியாக உள்ளனவா? என்பதை தலைமை ஆசிரியர் சரிபார்க்கவேண்டும்.
* பழுதடைந்த மின் கம்பிகளை தொடக்கூடாது, பழுதடைந்த மின்கம்பங்கள் அருகே நிற்கக்கூடாது என்று மாணவ-மாணவிகளிடம் அறிவுறுத்துதல்.
* கூடிய மட்டும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இறை வணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...