மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இதற்கான தகவலை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
மத்திய
செயலகப் பணி, ஆயுதப் படை, ரயில்வே, வெளியுறவுத் துறை அமைச்சகங்களில்
உதவியாளர், அஞ்சல் துறையின் ஆய்வாளர், கணக்கு தணிக்கையாளர், கணக்கைளர்,
இளநிலை கணக்காளர், வரித்துறையில் உதவியாளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள
இடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தென் மண்டலத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கு கொள்கின்றனர். 12 நகரங்களில் 236 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வு காலை, மாலை ஆகிய இருவேளைகளில் நடைபெறுகிறது.
தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கு, அனுமதிச் சான்று, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...