Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி

     முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி வழங்கப்படுவதால் மாணவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்மாணவமாணவியருக்கு தினசரி யோகாசன பயிற்சி வழங்கப்படுகிறது.
        உடல்மற்றும் மனரீதியான புத்துணர்வு பெறுவதற்குயோகா பயிற்சி உதவும் என்பதால் இது வரவேற்கத்தக்கது. ஆயினும்அனுபவம் உள்ள முறையான ஆசிரியர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டால்தான் மாணவமாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது பள்ளிகளில் இவ்வாறு யோகாவிற்கென தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக,வெளியிடங்களில் யோக பயின்று வரும் மாணவிகள் ஒருசிலர்பள்ளியில் "யோகா மாஸ்டராக&'செயல்படுவதாகவும்இதனால் மோசமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
யோகாசன ஆசிரியர் ஒருவர் கூறும்போதுசரியான முறையில் யோகாசனம் செய்வது மிகுந்த நன்மை தரும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சில ஆசனங்களை தவறான முறையில் செய்தால்மனம் மற்றும் உடல் ரீதியாக கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை,என்றார்.
எனவேபள்ளி நிர்வாகங்கள் முறையான அனுபவம் உள்ள ஆசிரியர்களை நியமனம் செய்துயோகா பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive