பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா
விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண்
வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி
முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தனது சந்தாதாரர்கள் அனைவருக்கும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) என்ற தனிப்பட்ட எண்ணை வழங்கி வருகின்றது. இந்த எண்ணை செயலாக்கம் செய்வதன் மூலம் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎப் கணக்கின் பாஸ் புக், யுஏஎண் கார்டு போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் தங்களுடைய விருப்பமான மொழியில் பெற்றுக் கொள்ளலாம்.
யுஏஎண் என்ற எண்ணை செயலாக்கம் செய்ய அனைத்து நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக தாம்பரம் பிஎப் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2226 2251 என்ற தொலைபேசி வாயிலாகவும், ro.tambaram@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு தீர்வுகாணலாம்.வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு யுஏ எண் வழங்குதல் மற்றும் செயலாக்குதல் 22.06.2015 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், பிஎப் பணம் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் படிவங்களில் இனி ஒரு ரூபாய் மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம். இம்முறையானது மின்னணுபணபரிவர்த்தனை மூலம் செட்டில் செய்யப்படும் படிவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அனைத்து தொழிற்சாலை, நிறுவனங்கள் தங்களது இபிஎப் சந்தாக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாதம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக சந்தா தொகை செலுத்தும் தொழிலதிபர்கள் வரும் டிசம்பர் 2015 வரை உள்ளூர் காசோலை, வரையோலை மூலமாக தொகையைச் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...