Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?

       அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

          மத்திய, மாநில அரசுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுகின்றன. இதற்காக தமிழகத்தில் மாவட்ட வாரியாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2012ல் இத்திட்டம் நிறைவடைந்த நிலையில், 2018 வரை நீடிக்கப்பட்டது.நிதி நெருக்கடியால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி உட்பட செயல்பாடுகள் குறைந்தன; ஒன்றியம் வாரியாக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டன; இப்பணியை மூத்த ஆசிரியர் பயிற்றுனர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.இந்நிலையில், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பதவியையும் ரத்து செய்ய கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிதி குறைப்பால் இப்பதவி காலியாக உள்ளது. இதற்கான பொறுப்பு முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கும் போது பணிச்சுமை, 

நிர்வாக குளறுபடி அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு காத்திருக்கும் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதிக்கப்படுவர். வரும் 2018 வரை இப்பதவியை நீடிக்கலாம், என்றார்.





1 Comments:

  1. Good News and Good decision. This post is only for promotion.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive