பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும்,
பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி
அறிவுறுத்தியுள்ளார்.
க. பரமத்தியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ச.
ஜெயந்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது க.பரமத்தி ஊராட்சியில்
நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்ட அவர், க.பரமத்தி
தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து,
பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாகவும்,
பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து முன்னூர் ஊராட்சி காளிபாளையத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும்
பணிகளை பார்வையிட்டார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், முரளிகண்ணன்,
அரவக்குறிச்சி வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் செளந்தரவள்ளி
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...