புதுடெல்லி: மத்திய அரசின் சமூக நலத்
திட்டங்களை ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மத்திய அரசின்
சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில்
மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் தினம் வருவதையொட்டி நாடு முழுவதும்
உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களை மத்திய அரசின் சமூக பாதுகாப்பு
திட்டங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, தங்களது
குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரும் சமூக பாதுகாப்பு திட்டங்களில்
இணையும் படி ஊக்கு விக்க வேண்டும். மத்திய அரசின் சமூக பாதுகாப்பு
திட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் பலன் பெறும் வகையில் அதிகாரிகள்
நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் உரிய உத்தரவுகளை
பிறப்பிக்க வேண்டும்.
அண்மையில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட
பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா
ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள்
ஆகியோர் இணையும் வகையில் ஊக்கு விக்க வேண்டும். செப்டம்பர் 5ம் தேதி
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் அன்றைய தினம் அனைத்து ஆசிரியர்களும் இதில்
பலன் பெறும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாங்கம்மா ராணி..இப்படி எல்லாத்திலயும் ஆசிரியர்களையும் அர்சு ஊழ்ஹியர்களையும் கோத்துவிட்டுட்டு, அ ந்தக்கம்பனிக்காரங்ககிட்ட கமிஷன் வாங்கிப்பீங்க..அப்பறம் அவன் எல்லாத்ட்தையும் நடுரோட்ல விட்டுட்டு ஓடிடுவான். நாங்க நாயா, பேயா அலையனும்.... நல்லா இருக்கும்மா உங்க பிளானூஊஉ...
ReplyDeleteCorrecta sonneenga...
ReplyDelete