Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசின் 'ஸ்காலர்ஷிப்' இணையதளத்தால்... நன்மைகள் ஏராளம்!: மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

         மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்' என்னும் நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான புதிய இணையதளம், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

         மத்திய, மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு இடையே, மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வந்தனர்.

இந்நிலையில், முறைகேடுகளை தவிர்க்கவும், மாணவர்கள் எளிதில் கல்வி உதவித்தொகை பெறவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில், மத்திய அரசு, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை' துவங்கியது; www.scholarships.gov.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகம் செய்தது. தேசிய 'இ-கவர்னன்ஸ்' திட்டத்தின்மூலம் செயல்படும் இந்த இணையதளத்தில், உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை விவரங்களும், அவற்றின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, பதிவு செய்யப்பட்டுள்ள பல்கலைகள், உதவித் தொகைக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை, விண்ணப்பிப்பு முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அனைத்து வகை கல்வி உதவித்தொகைக்கும் ஒரே விண்ணப்பம், ஒரே முறை பதிவு, வங்கி மூலம் எளிய முறையில் உதவித்தொகை, எஸ்.எம்.எஸ்., மற்றும் மின் அஞ்சல் மூலம் உடனடி தகவல்கள் பெறும் முறை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் மாணவர் சிரமங்களை போக்கும் வகையில் அமைந்துள்ளன. கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த இணையதள வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, இணையதள முகவரி, கல்வி உதவித்தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'இதுவரை, கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள்
இருந்தன. தற்போது, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த இணையதளம், மாணவர்கள் எளிதில் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக உள்ளது; பணிகளை சுலபமாக்கியுள்ளது. இந்திட்டம் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது,' என்றார்.

உதவி அழைப்பு எண் அறிமுகம்!:உதவித்தொகை பெறும் மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் வகையில், 040 23120300 என்ற உதவி அழைப்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை9, .00 மணி முதல் மாலை, 5.30 மணி வரை இந்த எண்ணுக்கு அழைத்து உதவிபெறலாம். 'நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், குறிப்பிட்ட திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதால், மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்' என்கின்றனர், ஆசிரியர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive