மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கருவூல துறை இணை இயக்குனர்
காத்தவராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கருவூலக் கணக்கு
துறையின், காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக
உதவியாளர் பணியிடங்களுக்கு, இன சுழற்சி மற்றும் தகுதியுள்ள
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் விதவை,
பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பொது ஆகிய பிரிவினருக்கு, 32 வயதும், பொதுப்
பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், ஜூலை
1-ஆம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்ட வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கான கல்வித் தகுதி, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள், இணை இயக்குனர், மாவட்ட
கருவூலம், ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...