தமிழகம்
முழுதும் அரசுக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றப்
பொதுக் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கல்லூரி
ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அரசுக்கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் சி. திருச்செல்வம் வெளியிட்ட அறிக்கை,
தமிழகம்
முழுதும் உள்ள 83 அரசுக்கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றப்
பொதுக் கலந்தாய்வை விதிகளுக்குட்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டின்
தொடக்கத்திலும் நடத்துவது வழக்கம்.
ஆனால், நடப்பு கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதம் கடந்த பிறகும் இதுவரை
கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கான
பணியிடமாற்றப் பொதுக் கலந்தாய்வு (Transfer Counseling) உடனடியாக நடத்த
தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன்,
அரசு கல்லூரிகளில் பணியாற்றும் இரண்டாம் நிலை முதல்வர்களுக்கும் பணி
மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு நடத்தி அவர்கள் பணியமர்த்த வேண்டும்
என அதில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...