செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள், ஜெர்மனி, பல்கேரியா, உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் நாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து செய்த ஆய்வை நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினர். அதன்படி, இவர்கள் புதிதாக ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் தனக்குத்தானே கற்பித்துக் கொள்வதுடன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி எதிர்வினை செய்யும் திறன் கொண்டது. இதில் என்ன சாதனை இருக்கிறது என்கிறீர்களா? இப்படி ஒரு சாதனத்தை வடிவமைக்க வேண்டுமானால் அது மூளையில் உள்ள கோடானுகோடி நுண்ணிய நரம்புகளோடு இணைந்து செயல்புரிய வேண்டும். பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்த பிரச்சனையில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளனர். இவர்கள் செய்ததில் முக்கியமான சாதனை மூளை நரம்பு அமைப்பு தொடர்பாக இதுவரை அறியப்படாமல் இருந்த மர்மத்தை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் உள்ள இயற்கையான மூளையானது வெளிச்சம், நகரும் பொருட்கள் என்று வெளிப்புறம் சார்ந்த வாழ்வனுபவங்களை கவனித்துக் கொள்ளும். விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கியுள்ள இந்த மின்னணு சாதனம் நினைவுகளை பதிந்து வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் நினைவூட்டும்.
இதன் மூலமாக டிமென்சியா (கடுமையான ஞாபக மறதி), அல்சைமர் நோய், பார்கின்சன் போன்ற நோய் பாதித்தவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழமுடியும். மேலும் இது எதிர்காலத்தில் செயற்கை அறிவு கொண்ட ரோபோவை உருவாக்குவதிலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...