“பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி
விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குனர், ராமேஸ்வர முருகன் பேசினார்.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில்,
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து பாட
முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடத்தில், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், நேற்று சேலத்தில்
நடந்தது. இதில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பேசியதாவது:
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மற்ற
மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக தேர்ச்சி விகிதம், வியக்கத்தக்கதாக
உள்ளது. எனினும், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி
விகிதம் சற்று குறைவாக உள்ளது.
மாணவர்களுக்கும், மாணவியருக்கும் இடையிலான தேர்ச்சி விகிதமும், 10 சதவீதம்
வரை, வேறுபாடு உள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யவும், கல்வியில்
பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாக
அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்
பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...