அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார்? யார்? என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
புதுமைக்கான ஆசிரியர் விருது பிராங்க்ளின் என்பவருக்கும், கிராம சேவைக்கான ஆசிரியர் விருது கருப்பய்யன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.
பழங்குடி மேம்பாட்டுக்கான ஆசிரியர் விருது தர்மராஜ்-க்கும், செயலூக்கத்திற்கான ஆசிரியர் விருது சொக்கலிங்கத்துக்கும், மொழித்திறன் மேம்பாடுக்கான ஆசிரியர் விருது திலீப்-க்கும் வழங்கப்பட்டன.
அறிவியல் விழிப்புணர்வுக்கான ஆசிரியர் விருது உமா மகேஸ்வரிக்கும், படைப்பாற்றலுக்கான ஆசிரியர் விருது சித்ராவுக்கும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு குழந்தைகள் கல்விக்கான ஆசிரியர் விருது கஸ்தூரி தேவராஜ்-க்கும், தொழிற்கல்விக்கான ஆசிரியர் விருது செந்தில் என்பவருக்கும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...