தமிழக
சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற
உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள்
வரலாம் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உயர் கல்வித்துறை, கடிவாளமில்லாத குதிரை போல இயங்கி வருவதாக, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில், தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. பணி நியமனங்கள், பாடத்திட்டம் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
* சமீபத்தில் நடந்த உதவிப் பேராசிரியர் நியமனத்தில், தேர்வு விதிகள் மீறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு, உயர் கல்வித்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
* பல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில் பேராசியர்களும், மாணவர்களும் எப்போது கல்லுாரிக்கு வருகின்றனர், செல்கின்றனர் என்பதை சரியாகக் கண்காணிக்காததால், வகுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல நேரங்களில், பேராசிரியர்களுக்குப் பதிலாக, ஆராய்ச்சி மாணவர்களே பாடம் எடுக்கும் நிலை உள்ளது.
* கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கு, முறையான அறிவிப்பு செய்து தகுதியானவர்களின் விண்ணப்பங்களை பெற்று, விதிப்படி நிர்ணயம் செய்யப்படவில்லை; பொறுப்பு என்ற பெயரில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து வருகின்றனர்.
* பல்கலை நிர்வாகப் பணிகளில், அதிக அளவுக்கு பேராசிரியர்களை நியமித்துள்ளதால், கற்பித்தலுக்கு, கல்லுாரிகள் போதிய அளவில் இல்லை.
* அரசு கல்லுாரிகளில் கவுரவப் பேராசிரியர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை.
* துணைவேந்தர் மற்றும் பதிவாளர்களை தேர்வு செய்வதில், தொடர்ந்து வெளிப்படைத்தன்மை இல்லை.
* அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலை என முக்கியமான பல்கலைகளில் பலர், பேராசிரியர் பணியை விட துறைத்தலைவர், பதிவாளர் அலுவலக அதிகாரிகள், துறை இயக்குனர், கல்லுாரி முதல்வர் போன்ற பணிகளை கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
* பாரதியார் பல்கலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாணவர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், எந்த விசாரணையும் நடத்தாமல் உயர் கல்வித்துறை அலட்சியம் காட்டி வருகிறது.
* தற்காலத்துக்கு ஏற்ற வகையில், பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவது, புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச அளவில் கலை, அறிவியல் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி, உயர் கல்வித்துறை மீது அடுக்கடுக்காக பல புகார்கள் கூறப்படுவதால், நாளை தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கையின் போது, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என, பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

4வது ஆண்டாக பகுதிநேரமாக அரசுப் பள்ளியில் பணியாற்றிவரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்களும் 31-08-2015 ல் 10 மணியளவில் தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முதல்வர் ''அம்மாவுக்கு'' கோரிக்கை மனு கொடுக்கிறோம்.
ReplyDeleteதஞ்சை மாவட்ட அனைத்துப் பகுதிநேர சிறப்பாசிரியர்களும் தங்கள் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் அம்மாவின் கவனத்தை ஈர்ப்போம்!
இப்படிக்கு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் (APSTA), தஞ்சை மாவட்டப் பிரிவு.