தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே
பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9
முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும்.
அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன. இதில் ஒரே காலியிடத்திற்கு பல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களை பணி நிரவல்
செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்
மட்டும் 240 உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட
உள்ளனர். இவர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு
நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பணிநிரவல் செய்வதற்கு
ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகி
கூறியதாவது: ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களை தெரிந்தே நியமித்துவிட்டு,
தற்போது பணி நிரவல் செய்கின்றனர். பணி நிரவல் நடக்கும் நாளில் முதன்மை
கல்வி அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர
உள்ளனர், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...