தமிழகத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 87.58 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின்
எண்ணிக்கை 6.12 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.86 சதவீதமாகவும்
உள்ளது.
மாநிலம் முழுவதும் 99,702 பெண்கள் உள்பட 1 லட்சத்து 88,586 பேர் தங்களது மதங்களைக் குறிப்பிடப்படவில்லை. கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மதவாரியாக மக்கள் தொகை விவரங்கள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
தேசிய அளவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்களின் எண்ணிக்கை79.8 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 14.2 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.3 சதவீதமாகவும், சீக்கியர்களின் எண்ணிக்கை 1.7சதவீதமாகவும் உள்ளது.
தமிழக அளவிலான புள்ளி விவரம் வருமாறு:
தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும்.இவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 6 கோடியே 31 லட்சத்து 88 ஆயிரத்து 168 (87.58 சதவீதம்) ஆக உள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 42 லட்சத்து 29 ஆயிரத்து 479 (5.86 சதவீதம்) ஆக உள்ளது. கிறிஸ்தவர்களின்எண்ணிக்கை 44 லட்சத்து 18 ஆயிரத்து 331 (6.12 சதவீதம்) ஆக உள்ளது.சமண மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 265 ஆக உள்ளது.
சீக்கியர்களின் எண்ணிக்கை 14,601 ஆகவும், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 11,186 ஆகவும் உள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,414 ஆக உள்ளது. கடந்த 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 88.1 சதவீதமாகவும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6.06 சதவீதமாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.56 சதவீதமாகவும் இருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...