பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு
ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.
வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆகஸ்ட் 26 முதல் 29 வரை பணி நிரவல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாக 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
உபரி ஆசிரியர்களைக் கணக்கெடுத்ததில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவலகம், பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் இடையே முரண்பாடுகள் உள்ளன.இந்தக் கல்வியாண்டில் 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்போது இடமாற்றம் செய்தால் அவர்களது குடும்பத்தினர் சிரமப்படுவர். எனவே, உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தே ஆக வேண்டும் என்றால், வரும் மே அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...