தற்போது பள்ளிக்கல்விதுறையில் மே மாதம்
நடத்தப்பட வேண்டிய பணி நிரவலை ஆசிரியர்களின் குடும்பம் மற்றும் பள்ளி
மாணவர்களின் நலன் கருதி அறவே ரத்து செய்திட நமது மாநிலத்தலைவர்
கு.தியாகராஜன் தலைமையிலான மாநில பொறுப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டு
வருகிறார்கள் . இந்தக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதே
நேரத்தில்
நமது தொடர் முயற்சியின் பலனாக தமிழகம்
முழுவதும் பணி நிரவல் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை
மூவாயிரத்திலிருந்து ஆயிரமாக குறைக்கப்பட இருப்பதாக அறிகிறோம்....
பொதுப்படையாக ஆசிரியர் மாணவர் விகிதத்தை
கடந்தவாரம் 1: 35 என்ற அடிப்படையில் ஆயத்த வேளையில் பள்ளிக்கல்வித்துறை
ஈடுபட்டிருந்த வேளையில் நமது சங்கம் கொடுத்த நெருக்கடியின் காரணமாக 1:30
என்று கணக்கிட இயக்குனர் உத்தரவிட நாம் அழுத்தம் கொடுத்ததன் விளைவாக
குறைந்த பட்சமாக 1: 25 என்ற அளவில் குறைத்திட இயக்குனரிடம் தினமும் பேசி
வருகிறோம். இதன் பயனாக இந்தக்கோரிக்கை குறித்து பரிசீலிக்க முழு முயற்சி
எடுப்பதாக தெரிவித்துள்ளார் .
மேலும் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே மட்டுமே
பணி நிரவல் செய்யப்பட வேண்டும் . என்று கோரிக்கை விடுத்துள்ளதன் பலனாக
மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் அறவே இருக்காது என்கிற உறுதியை
உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்,
பணி நிரவலை காரணம் காட்டி உங்களது பெயரை நிரவல்
பட்டியலில் இருந்து நீக்கிவிடுவதாக கூறி மாவட்ட அலுவலக மட்டத்தில்
உங்களிடம் பணம் பறிக்கும் வேலையை சில கல்வித்துறை தரகர்கள் செய்வதாக
அறிகிறோம்.
மாவட்ட அளவில் உங்களின் பெயரை நீக்கவோ
சேர்க்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதோடு இது சார்ந்து இயக்குனர்
அவர்களிடம் தொடர்ந்து பேசிவருவதால் தற்போது பட்டியலில் இருக்கும்
ஆசிரியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்படஇருக்கிறது மேலும் இந்தாண்டு
பணி நிரவல் என்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாதகம் ஏற்படுத்தாத வண்ணம்
மிகக்குறைந்த ஆசிரியர்களுக்கே மட்டும் நடந்திட அனைத்து முயற்சிகளையும் நமது
சங்கம் செய்து வருகிறது
என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே இது சார்ந்து யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கிறோம் .......
நேயமுடன்...
பொதுப்பணியில்
கு.தியாகராஜன் - மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
PANI NIRAVAL OK, HELLO, TEACHERS VERY CARFUL AMMA SUMMA CHINEMAVULA VARMARI VARANGA, IVANKALA NAMBI VOTTU POTTA, UNKALUKKU VO VO VO POTA KATHIRUKKU 1 YEARS 2016 ELECTION ONLY ALL TEACHER CHANGE YOUR LIFE
ReplyDelete