அரசு உதவி பெறும்
சிறுபான்மை பள்ளியின் ஆசிரியை, பணிநீக்கம் செய்யப்பட்டதை,
சென்னை உயர்
நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை, மீண்டும்
பணியில் அமர்த்த
உத்தரவிட்டுள்ளது.
ஆறு மாதத்திற்குள்...:வேலுார் மாவட்டம், அரக்கோணம், சி.எஸ்.ஐ.,
மத்திய தொடக்கப்
பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக, 1987ல், செலினா
மார்க்கரெட் நியமிக்கப்பட்டார். பின்,
2000ல், புனித
ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்
பள்ளிக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார்.
2006ல், பள்ளி
வளாகத்தில், குடும்ப விழா நடந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, செலினாவும்,
சாது சுந்தர்
சிங் என்ற
ஆசிரியரும் செய்துள்ளனர். இருவருக்கும்
இடையே பிரச்னை
ஏற்பட்டுள்ளது.தன்னை அடிப்பதற்காக கையை ஓங்கியதாகவும்,
திட்டியதாகவும், சாது சுந்தர் சிங் மீது
செலினாவும், தன்னை தாக்கியதாக, செலினா மீது
சாது சுந்தர்
சிங்கும், போலீசில்
புகார் அளித்தனர்.
இதையடுத்து, செலினா, 'சஸ்பெண்ட்'
செய்யப்பட்டார்; பின், 2007 ஜூலையில், நிரந்தர பணிநீக்கம்
செய்யப்பட்டார். பணிநீக்கத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில்,
செலினா மனுத்
தாக்கல் செய்தார்.பணிநீக்கத்தை ரத்து
செய்து, ஆறு
மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கும்படி, பள்ளி
தாளாளருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின்
போது, செலினா
கோரும் ஆவணங்களை
அளிக்கும்படியும் உத்தரவிட்டது.
நீதி மீறப்பட்டுள்ளது:இதையடுத்து,
விசாரணை அறிக்கை
அடிப்படையில், செலினாவை பணிநீக்கம் செய்து, பள்ளி
தாளாளர், 2009 அக்டோபரில் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை
ரத்து செய்யவும்,
மீண்டும் பணியில்
அமர்த்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், செலினா
மார்க்கரெட் மனுத் தாக்கல் செய்தார்.மனுதாரர்
சார்பில் ஆஜரான
வழக்கறிஞர் எம்.ரவி, ''மனுதாரர் கோரிய
ஆவணங்கள் வழங்கப்படவில்லை.
நிர்வாகம் தரப்பிலான
சாட்சிகளை குறுக்கு
விசாரணை செய்ய,
மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை. இயற்கை நீதி
மீறப்பட்டுஉள்ளது,'' என்றார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில்,
வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ''மாணவர்கள், ஆசிரியர்கள்,
பொதுமக்கள் முன்னிலையில், ஒரு ஆசிரியரை, மனுதாரர்
அடித்துள்ளார். பணிநீக்க முடிவை, நிர்வாகம் தான்
எடுத்தது. மனுதாரர்
குறித்து, மற்ற
ஆசிரியர்களும் புகார் கூறியுள்ளனர்,'' என்றார்.
மீண்டும் பணி:மனுவை
விசாரித்த, நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு:விசாரணை நடவடிக்கையின்
ஒவ்வொரு கட்டத்திலும்,
நடைமுறை மீறல்கள்
இருந்துள்ளன. ஆவணங்கள் கிடைக்கவில்லை என, விசாரணையின்
போது, மனுதாரருக்கு,
விசாரணை அதிகாரி
விளக்கியதாக, அறிக்கையில் இல்லை. 'ஆவணங்களை அளிக்க
வேண்டும்' என,
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பின்பற்றப்படவில்லை.
மனுதாரர், 20 ஆண்டுகளுக்கு மேல்
பணியாற்றி உள்ளார்.
வரும், மார்ச்சில்
ஓய்வு பெற
உள்ளார். எனவே,
மீண்டும் இதை
விசாரணைக்கு அனுப்ப விரும்பவில்லை.பணிநீக்க உத்தரவு
ரத்து செய்யப்படுகிறது.
சம்பளம், இதர
சலுகைகளுடன், எட்டு வாரங்களில், மனுதாரரை மீண்டும்
பணியில் அமர்த்த
வேண்டும்.இவ்வாறு
நீதிபதி சிவஞானம்
உத்தரவிட்டு உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...